ஓசூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.

ஓசூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-07-31 00:30 GMT
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் துர்காபூமிஜி(36) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகர் பகுதியில் தங்கி பில்டிங் கான்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இவரிடம் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா(50) என்பவர் துர்கா பூமிஜியிடம் வேலை பார்த்து வருகிறார். ஓசூர் சின்ன எலசகிரி அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து வரும் கட்டடத்தில் சம்வம் அன்று வேலை பார்த்த போது கிருஷ்ணா எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News