தாராபுரத்தில் ஆடி மாத தீர்த்த கலச அபிஷேக விழா

இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாத தீர்த்த கலச அபிஷேக விழா;

Update: 2025-07-31 06:31 GMT
திருப்பூர் கிழக்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பில், அம்மனுக்கு 1008 தீர்த்த கலச மஞ்சள் நீர் அபிஷேக விழா தாராபுரத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட செயலாளர் நளினி முன்னிலை வகித்தார். தென்தாரை சின்ன காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்கலச ஊர்வலம் புறப்பட்டு, பூக்கடை கார்னர் வழியாக பொள்ளாச்சி ரோடு தனியார் கல்யாண மண்டபம் அருகே நிறைவு பெற்றது. இதில் கோட்ட செயலாளர்கள் கோவிந்தசாமி, குறிஞ்சி சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பெண்கள் மஞ்சள் நீரையும், முளைப்பாரிகளையும் எடுத்து வந்து, விநாயகர் கோவிலில் வைத்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர்.

Similar News