சிவகங்கையில் சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சி குழு கூட்டம்
சிவகங்கையில் சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சி குழு கூட்டம் நடைபெற்றது;
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறையை சார்ந்த அலுவலர்கள், செட்டிநாடு புராதன வீடுகளின் தங்கும் விடுதி உரிமையாளர்கள், கீழடி அருங்காட்சியக பொறுப்பாளர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்