திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தடை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தடை;

Update: 2025-07-31 12:26 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டவிரோதமாக காவல் துறை அதிகாரிகளால் அதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதற்காக கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தன அதற்கான விண்ணப்பத்தை கொடுத்து காவல் துறையிடம் அனுமதி பெறுவதற்காக காத்திருந்தோம் ஆனால் அதற்கான விண்ணப்பத்தை காவல்துறையினர் மறுக்கப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாததால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆளுங்கட்சி சார்ந்தவர்களுக்கு அனுமதி வழங்குவார்கள் அவர்களுக்கு சார்ந்தவர்கள் பொதுக்கூட்டம் ஏற்படுத்தினால் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேர்மையான காவல்துறையினர் பணியாற்ற கூடிய நிலையில் அவர்களை தடுக்கப்படுகிறது தமிழக அரசு. முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் சொல்வார்கள் காவல்துறையுடைய ஈரல் கெட்டு விட்டது என. ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக சீரழிந்து விட்டு உள்ளது. அன்றாடம் கொலை கொள்ளை கற்பழிப்பு என சீரழிந்து வருகிறது. போதைப் பொருள் கடத்தல் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது குற்ற செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது பாலியல் பலாத்காரம் மற்றும் குற்றச் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கூட்டு பாலியல் பலாத்காரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது பல இடங்களில் திமுக கட்சியினரே குற்றச்சம்பங்களில் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளார்கள். ஒரு மாணவனை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார்கள். அதில் திமுக பிரமுகர் பேரன் சரணடைந்துள்ளார் அந்த குற்றச்செயல்களை செய்யக்கூடியவர்கள் பாதுகாக்க உள்ளவர்களாக இவர்கள் உள்ளார்கள் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் இன்றுவரை நிகிதா யார் பின்னாடி உள்ளார் என்பது தெரியவில்லை யார் அந்த சார் என்பது தெளிவாக முடியாமல் உள்ளது. நிகிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்க கூடிய அரசாக இந்த அரசாங்கம் உள்ளது. அவர்கள் தைரியமாக குற்ற செயலில் ஈடுபடுகிறார்கள் ‌ நேற்று செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள் ‌ எதற்காக தாமதம் படுத்திருக்கிறீர்கள். செந்தில் பாலாஜியிடம் 2000 பேர் வேலைக்காக பணம் கொடுத்துள்ளார்கள் அவர்களை எப்போது வழக்கில் சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். இது குறித்து உச்ச நீதிமன்றமே கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. வழக்கை இழுத்தடித்து நீர்த்துப்போக செய்யப்படவுள்ளது. என திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டியளித்தார்.

Similar News