சன்சைடு கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து விபத்து

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் வர்த்தக கட்டிடத்தின் சன்சைடு கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் 5 - க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம், நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்ப்பு;

Update: 2025-07-31 13:16 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தனியார் வர்த்தக கட்டிடங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது இந்த வர்த்தக கட்டிடங்களில் பலதரப்பட்ட கடைகள் வைக்கப்பட்டு உள்ளது அந்த வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ஒரு தனியார் வர்த்தக கட்டிடத்தில் போட்டோ ஸ்டுடியோ மெடிக்கல் செல்போன் விற்பனையகம் செல்போன் உதிரிபாக விற்பனையகம் ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் தினசரி பகல் நேரங்களில் அதிகமான மக்கள் இருசக்கர வாகனத்தில் இந்த கடைகளுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் இன்று வர்த்தக கட்டிடத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த சன்சைடு கான்கிரீட் சுவர் திடீரென இடிந்து விழுந்தது எந்த விபத்தில் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது நல்வாய்ப்பாக மேற்கூரை இடிந்து விழுந்த போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பழமையான வர்த்தக கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News