விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தீர்மான விளக்க பொது கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தீர்மான விளக்க பொது கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.;

Update: 2025-07-31 15:13 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டம் நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க மதச்சார்பின்மை காப்போம் மக்கள் திரன் பேரணியில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுன், நாமக்கல் மைய மாவட்ட செயலாளர் நீலவானத்துநிலவன் , நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் முகிலன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர் அருணாச்சலம் வரவேற்பு அளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மேலிட பொறுப்பாளர் கவிஞர் இளமாறன், சேலம் நாமக்கல் மண்டல செயலாளர் சேனாதிபதி இமயம்வர்பமன், பழ. மணிமாறன் ,சேலம் நாமக்கல் மண்டல துணை செயலாளர் அரசன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். திருச்சி விசிக பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாக்க வேண்டும், வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ( NPR), தேசிய குடிமக்கள் பேரேடு ( NRC) ஆகியவற்றை தயாரிப்பதைக் கைவிட வேண்டும், மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அறிவித்திட வேண்டும், ஜம்மு- காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும், மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும், சமவாய்ப்பு ஆணையத்தை அமைத்திட வேண்டும், பீகார் மாநிலம் புத்தகயாவிலுள்ள மகா போதி விகாரையைப் பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது, பொது சிவில் சட்டம் ( UCC) கொண்டுவரும் முயற்சியைக் கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் திருச்சி பேரணியில் நிறை வேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விசிக முடிவு செய்தது. அதற்காக தமிழகம் முழுவதும் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் நடைபெற்றது. இறுதியில் நாமக்கல் பழக்கடை சக்திவேல் நன்றி உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர், முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News