இலக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி..
இலக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி..;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2025-26 ஆம் ஆண்டிற்கான தற்காப்பு கலைப் பயற்சி பள்ளியில் 6,7மற்றும் 8 வகுப்பு மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6.7 மற்றும் & 8.வகுப்பு மாணவிகளுக்கு ஒருக்கிணைந்த பள்ளிக்கல்வி 2025-26 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக் கலை புயிற்சி இன்று (1.8-2025) வெள்ளிக்கிழமை பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.மு.சதாசிவம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் பயிற்சியாளர் திரு. வெ.சரவணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு பல்வேறு தற்காப்பு கலை பயிற்சி குறித்தும் விளக்கம் அளித்து அதன் செயல்முறைகள் குறித்து செய்து காட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.