காங்கேயம் பகுதியில் இன்று மின்தடை

காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று 2ம் தேதி மின்நிறுத்தம்;

Update: 2025-08-02 00:43 GMT
காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் இன்று 2ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பாதைகளில் பராமறிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், காங்கேயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காங்கேயம் நகர், திருப்பூர் ரோடு, கரூர் ரோடு, கோவை ரோடு, தாராபுரம் ரோடு, சென்னிமலை ரோடு, பழையகோட்டை ரோடு, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு,படியூர். சிவன்மலை துணை மின் நிலையத்‌துக்கு உட்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோ கார்டன், மறவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, சாவடி, மூர்த்திரெட்டி பாளையம், நெய்க்காரன் பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி. முத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் மற்றும் அவற்றை சார்ந்த பகுதிகளில் இனாறு 2ம் தேதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Similar News