ஆம்பூரில் திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆம்பூரில் திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ நாகலம்மன் திருக்கோயிலில் முப்பதாம் ஆண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு! திரளான பக்தர் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு நாகா லம்மன் திருக்கோயிலில் 30 ஆம் ஆண்டு மூன்றாவது ஆடிவெள்ளியை ஒட்டி திருவிளக்கு பூஜை மிகவும் விமற்சியாக நடைபெற்றது இதில் அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மலர்மாலைகள் மற்றும் வண்ண வண்ண பூக்கள் வெள்ளி ஆபரணங்கள் பொன் ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் வீட்டில் உள்ளவர்கள் பிள்ளைகள் உறவினர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கோயில் வளாகத்தில் அமர்ந்து விளக்கேற்றி பூஜை நாமங்க்கள் சொல்லி விளக்கேற்றி வழிபட்டனர் பின்னர் அனைவருக்கும் அண்ணதான பிரசாதம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்