சூளகிரி அருகே டூ வீலரில் மீது கார் மோதி விபத்து.
சூளகிரி அருகே டூ வீலரில் மீது கார் மோதி விபத்து.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கட்டிக்கானப்பள்ளி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் 2 பெண்களுடன் டூ வீலரில் சென்றனர். அப்போது கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்த பெண் உட்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் அதே சாலையில் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மேலே ஏறியதில் தேசிய நெடுஞ்சாலையில் இழுத்து சென்றதால் டூ வீலரில் தீப்பற்றி எரிந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.