ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான சொத்தை சர்ச் பெயரில் மாற்றிய பாதிரியாரை சிறை பிடித்த கிறிஸ்துவ மக்களால் பரபரப்பு...*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான சொத்தை சர்ச் பெயரில் மாற்றிய பாதிரியாரை சிறை பிடித்த கிறிஸ்துவ மக்களால் பரபரப்பு...*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான சொத்தை சர்ச் பெயரில் மாற்றிய பாதிரியாரை சிறை பிடித்த கிறிஸ்துவ மக்களால் பரபரப்பு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் கிராமத்தில் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயம் இயங்கி வருகிறது இந்த ஆலயத்தில் அருள்தன்ராஜ் என்பவர் பாதிரியாராக கடந்த எட்டு வருடங்களாக இருந்து வருகிறார். இவர் பரிசுத்த பவுல் ஆலயம் அருகே கிறிஸ்துவ நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட சமுதாயக்கூடம் 18 சென்டில் உள்ளது அதை போலியாவணங்கள் தயாரித்து முறைகேடு செய்து சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயம் பெயரில் கடந்த மே மாதம் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வருவாய்த்துறையினர், வட்டாட்சியர், மற்றும் சப்கலெக்டர், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறைகேடு செய்து தங்களது சமுதாய சொத்துக்களை பாதிரியார் சிஎஸ்ஐ சர்ச் பெயரில் மாற்றியதாகவும் பத்திரப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே பாதிரியார் பணி மாறுதலாக வேறு ஒரு ஆலயத்திற்கு செல்வதற்காக தங்கி இருந்த வீட்டை காலி செய்து கொண்டு இருந்த போது இதனை அறிந்த கிறித்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாதிரியார் அருள்தன்ராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் அசம்பாவிதங்களை தவிர்க்க உடனடியாக பாதிரியார் வீட்டுக்கு விரைந்து வந்து பாதுகாப்பு கொடுத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மேலும் இது சம்பந்தமாக வரும் நான்காம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் போட்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலி ஆவணம் தயாரித்து முறைகேடு செய்த பாதிரியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு கலைந்து சென்றனர்.