அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசிய அரசு ஒப்பந்ததாரரின் தனியார் பொறியாளர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாள
அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசிய அரசு ஒப்பந்ததாரரின் தனியார் பொறியாளர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசிய அரசு ஒப்பந்ததாரரின் தனியார் பொறியாளர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார்வளாகம் பகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் சுமார் 5 கோடியே 42 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு தேவையான கட்டுமான பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கி வைப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தங்களுக்கு தேவையான ஊதியத்தை அரசு ஒப்பந்ததாரரின் தனியார் பொறியாளர் முரளி என்பவர் வழங்க மறுப்பதாகவும் சுமைத்துக்கும் தொழிலாளர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அரசு அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டுமான பொருட்கள் வாகனத்தில் வந்ததாகவும் அதை இறக்கி வைப்பதற்கு அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை பயன்படுத்தாமல் வேறு நபர்களை வைத்து தனியார் பொறியாளர் முரளி என்பவர் இறக்கியதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வயில் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு அண்ணா தொழிற்சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முரளி மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பின்பு அண்ணா தொழிற்சங்க சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேட்டி : மாரியப்பன்