ஓசூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பூ வியாபாரி உயிரிழப்பு.

ஓசூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பூ வியாபாரி உயிரிழப்பு.;

Update: 2025-08-02 12:47 GMT
பெங்களூரு மாதநாயக்கன அள்ளியை சேர்ந்தவர் திம்மசெட்டி 54) பூ வியாபாரியான. இவர் ஓசூருக்கு வந்தார். அப்போது ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளிபோருந்து நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த டூவீலர் திம்மசெட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News