நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் மனு
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
நெல்லையில் நடைபெற்ற கவின் கொலை வழக்கை கண்டித்து கடந்த 31ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணசாமி மகன் ஷியான் கிருஷ்ணசாமி முக்குலத்தோர் சமுதாயத்தை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று நாங்குநேரி காவல் நிலையத்தில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட தலைவர் வானமாமலை ஷியான் கிருஷ்ணசாமி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.