முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை ஏற்பாடுகள் தீவிரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் நாளை (4-08-25) சுற்று பயண விவரம்;

Update: 2025-08-03 09:36 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் நாளை (4-08-25) சுற்று பயண விவரம் 4-08-25 காலை 10 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள வின் பாஸ்ட் நிறுவனத்திற்கு வருகை தந்து அந்த கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்க மஹாலில் நடைபெறும் மினி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் மேலும் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 12 45 மணியளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்இதைதொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் முதலமைச்சர் விழாக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.

Similar News