கோவை: புதிய புறக்காவல் சாவடி திறப்பு!
K.G.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் புதிய புறக்காவல் சாவடி இன்று திறக்கப்பட்டது.;
K.G.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் புதிய புறக்காவல் சாவடி நேற்று திறக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இதனை துவங்கி வைத்தார். நெடுஞ்சாலை வழியாக நடைபெறும் குற்றங்கள், விபத்துகள், வழிப்பறிகளை தடுக்கும் நோக்கில் இந்த சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து வாகனம் செயல்படுவதாகவும், சார்பு ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குற்றங்கள் தடையின்றி நடைபெற பொது மக்களும் காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.