கோவை: வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் – மூன்று பேர் கைது
கோவை பீளமேடு அருகே சக்திநகரில் உள்ள சொந்த வீட்டில் தங்கியிருந்த ஹரிஹரனின் அழைப்பின் பேரில் சென்ற வீட்டு உரிமையாளர் சுந்தர்ராஜ் (57), மூன்று நபர்களிடம் தாக்குதலுக்குள்ளானார்.;
கோவை பீளமேடு அருகே சக்திநகரில் உள்ள சொந்த வீட்டில் தங்கியிருந்த ஹரிஹரனின் அழைப்பின் பேரில் சென்ற வீட்டு உரிமையாளர் சுந்தர்ராஜ் (57), மூன்று நபர்களிடம் தாக்குதலுக்குள்ளானார். சிவகுமார் (24), ஜெயகுமார் (22), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அவர்களை கண்டித்த சுந்தர்ராஜை, "நாங்கள் பெரிய ரவுடிகள்" என கூறி, தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.