ராசிபுரம் இன்னர் வீல் சங்கம்,குமரன் மருத்துவமனை இணைந்து இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது...

ராசிபுரம் இன்னர் வீல் சங்கம்,குமரன் மருத்துவமனை இணைந்து இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது...;

Update: 2025-08-03 14:24 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் இராசிபுரம் பெரிய அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள குமரன் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் இலவச ரத்த பரிசோதனை முகாம் நடைத்தப்பட்டது. இம்முகாமில் சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு பரிசோதனை ,தைராய்டு பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் உடல் நிறை குறியீடு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைக்கு பின் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவைப்படுபவர்களுக்கு இலவச சர்க்கரை நோய் மாத்திரைகள்,ரத்த அழுத்த மாத்திரைகள், கொலஸ்ட்ரால் மாத்திரைகள் மற்றும் சத்து மாத்திரைகள் முகாமில் கலந்து கொண்ட 63 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.K. குமரன் மற்றும் Dr.G. அட்சயா மற்றும் ராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் தலைவி திருமதி.Adv. N.சிவலீலா ஜோதி கோபிநாத் செயலாளர் திருமதி.மகாலட்சுமி ராஜா, மற்றும் திருமதி சுதா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Similar News