தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரணி.

தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரணி.;

Update: 2025-08-04 04:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், தளி எம்.எல்.ஏ. டி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்ட பேரணி நடந்தது. முத்தரசன் பேசும்போது பாஜகவின் விசுவாச அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் ஜனநாயக ரீதியில், சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றா ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று பல்வேறு கருத்துக்கள் எடுத்து கூறினார்.

Similar News