மகேந்திரசிங் டோனி கோவையில் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திரசிங் டோனி, கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்தார்.;

Update: 2025-08-04 04:50 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திரசிங் டோனி, கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட டோனி, முதலில் தனியார் ஓட்டலுக்கு சென்று மதிய உணவுகளை உற்சாகமாக அனுபவித்தார். பின்னர் மாலை 4 மணியளவில், கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு பிரபல கைக்கடிகாரம் கடைக்கு சென்றார். அங்கு தனது விருப்பத்திற்கேற்ப புதிய கைக்கடிகாரம் ஒன்றை தேர்ந்தெடுத்து வாங்கினார். டோனி வருகை பற்றிய தகவல் விரைவில் பரவ, அவரது ரசிகர்கள் அந்த கடைக்கு வெளியே திரண்டனர். பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கடை முன் அவரை ஒரு பார்வையாவது காணும் ஆசையில் ஆரவாரமாக காத்திருந்தனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு, கடைக்குள் இருந்து வெளியே வந்த டோனி, காரில் ஏறிய போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமாக கத்தினர். அவரை பார்த்து கையசைத்ததும், செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து, டோனி தொண்டாமுத்தூர் நோக்கி காரில் புறப்பட்டார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வழியாக சென்னைக்கு புறப்பட உள்ளார்.

Similar News