தமிழகத்தில் தகுதியற்றவர்கள் வாக்காளராக மாறாமல் இருப்பதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் - என்.ஆர்.இளங்கோ

திமுக;

Update: 2025-08-04 15:22 GMT
தமிழகத்தில் தகுதியற்றவர்கள் வாக்காளராக மாறாமல் இருப் பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என திமுக சட்டத் துறைச் செயலாளரும், எம்பியுமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். திமுக சட்டத் துறை சார்பில் தஞ்சாவூரில் நேற்று 2006 தேர்தல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடை பெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்தார், திமுக சட்டத் துறை இணைச் செயலர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், சூர்யா வெற்றிகொண்டான், எம்.பி. ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரை, சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், என்.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக சட்டத் துறைச் செயலாளரும், எம்.பி.யு மான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியது தமிழகத்தில் வட மாநிலத்தவரின் வாக்குகள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சட்ட வழிமுறைகளின்படி யாரெல்லாம் தகுதியற்றவர்களோ, அவர்களை வாக்காளர்களாக சேர்க்காத அளவுக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாத நிலையில் இந்திக்காரர்களை எப்படி திணிக்க முடியும். சட்டத்தின்படி ஒருவர் ஒரு இடத்தில் குடியிருப்போராக இருக்க வேண்டும். இந்தியக்குடிமகனாக 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அப்பகுதியில் வாக்காளராக முடியும். இதன்படி, தமிழகத்தில் தகுதியற்றவர்கள் எப்போதும் வாக்காளராக மாறாமல் இருப்பதற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Similar News