அமராவதி அன்னை சிலை அமைக்க கால்கோல் விழா
புதுப்பையில் அமராவதி அன்னை சிலை அமைக்க கால்கோல் விழா;
புதுப்பை, முளையாம்பூண்டி, அமராவதி ஆற்றின் படித்துறையில் அமராவதி அன்னை சிலை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார்.திருமுறை ஓதுவார் ஞான சம்பந்தர், புதுப்பை ஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமராவதி ஆறு தொடங்கும் முகத்துவாரம் முதல் ஆற்றின் கடைசி வரை எங்கும் அமராவதி அன்னை சிலை இல்லை. இயற்கை மற்றும் நீராதாரங்களை நேசிக்கவும், மக்கள் வழிபடவும் முளையாம்பூண்டி படித்துறையில் சிலையமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வரசி சிவமுத்து, ஊர் பிரமுகர் பழனிச்சாமி, முத்துசாமி, கோவில்நிர்வாகிகள் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.