தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி அமைச்சர் ஆய்வு
ரூ. 5 3/4 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு;
தாராபுரம் அரசு மருத்துவமனை அருகே தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் இட நெருக்கடி காரணமாக நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில், ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் உறுதித்தன்மை, கட்டிடப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் கட்டிடத்தின் வரைபடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தாராபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, குப்பிச்சி பாளையம் முருகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், குப்பிச்சிபாளையம் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.