ராமநாதபுரம் ஏழு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த ஏழு கிராம பொதுமக்கள்;

Update: 2025-08-05 03:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சிக்குட்பட்ட கும்பரம் ஊராட்சியில் 7 கிராம மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சி பகுதியில் கிட்டத்தட்ட நான்காயத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் குறிப்பாக ராமன் வலசை, வடக்குக்கும்பரம் பூசாரி வலசை, தெற்கு கும்பரம், கள்ளுக் கிணற்று வலசை, கோகுல் நகர், ஏ, டி நகர், உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் அங்கு விமான நிலையம் அமையப்போவதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்ததாக மக்கள் தெரிவித்ததோடு மட்டுமின்றி எங்களுடைய வாழ்வாதாரமே தென்னை மரத்தையும் பனை மரத்தையும் நம்பியே உள்ளது அது மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளையும் தற்போது இந்த தென்னை பனை அதிகம் வளரக்கூடிய இடங்களில் தற்போது விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்து வருகின்றனர் விமான நிலையம் அமைத்தால் எங்களுடைய ஏழு கிராம மக்களின் வாழ்வாதார முற்றிலும் முடக்கப்படும் எனவும் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்ததோடு எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத் தரக் கோரியும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனுவை அளித்தனர்

Similar News