ராமநாதபுரம் மதுக்கடை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் மனு
ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் மதுகடைகளை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு;
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மிக முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் ராமேஸ்வரத்திற்கு தினசரி வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் புனித நகரம் என்பதால் ராமேஸ்வரம் தீவில் மதுக்கடைகள் செயல்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மது பாட்டில்களை அவங்க பாம்பனில் உள்ள டாஸ்மார்க் கடைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் மதுபான கடை இல்லாததால் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வரப்பட்டு ராமேஸ்வரத்தில் குடிசை தொழிலை போன்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் செல்லும் பலரும் மது போதையில் ராமேஸ்வரம் நோக்கி வரும்போது வழியில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதால் ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிச்சை என்பவர் மற்றும் ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரு பிரிவுகளாக மனு அளித்தனர்.