ஆசனூர் அருகே வாகனத்தை தக்காளி வேணில் தக்காளி தேடும் யானை

ஆசனூர் அருகே வாகனத்தை தக்காளி வேணில் தக்காளி தேடும் யானை;

Update: 2025-08-05 04:25 GMT
ஆசனூர் அருகே வேணில் இருந்து தக்காளி எடுத்து சாப்பிட்ட யானை சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனச்சாலை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆசனூர் - கேர்மாளம் ரோட்டில் இரவு உலா வந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த தக்காளி லோடு ஏற்றிய வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் உணவு ஏதாவது கிடைக்குமா என தேடியது. அதிலிருந்து தக்காளி எடுத்து தின்ற யானை பின் வனப்பகுதிக்குள் சென்றது.

Similar News