பி.என்.பி. நகர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு துறையினர் வந்து பாதுகாப்பாக பிடித்து மீட்டனர்!

கோவை மாவட்டம், பி.என்.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு புகுந்ததால் பரபரப்பு.;

Update: 2025-08-05 06:34 GMT
கோவை மாவட்டம், பி.என்.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு புகுந்தது. இதனால் அந்த வீட்டு வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு பாம்பை பாதுகாப்பாக பிடித்து, பின்னர் அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த அதிரடியான நடவடிக்கைக்காக தீயணைப்பு துறை அதிகாரிகள் பாராட்டைப் பெறுகின்றனர். மேலும், இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து ஏற்பாடு செய்த திரு. கோபால் மற்றும் திரு. பசிர் ஆகியோருக்கு பி.என்.பி. நகர் பொதுமக்கள் உளமாற நன்றி தெரிவித்துள்ளனர்.

Similar News