திருப்பத்தூர் அருகேவாலிபர் நீரில் மூழ்கி பலி.
வாலிபர் நீரில் மூழ்கி பலி. தீயணைப்பு காவலர்கள் உடலை மீட்ட நிலையில் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி. தீயணைப்பு காவலர்கள் உடலை மீட்ட நிலையில் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை பாரத கோயில் பகுதியில் வசிப்பவர் முனுசாமி மகன் மணி என்கிற அருணாச்சலம் (33). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இவர் பசலி குட்டை பகுதியில் அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் வழக்கம் போல குளிக்க சென்றுள்ளார். சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக கிணற்றில் குறித்து உள்ளே சென்றவர் மீண்டும் வெளியே வராமல் சேற்றில் சிக்கி உள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் கிணற்றில் குதித்த நபர் மீண்டும் வெளியே வராததை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவலை கூறியதை தொடர்ந்து தீயணைப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் உடலை மீட்ட கிராமிய காவல்துறை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.