ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 3 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் விஜயவாடாவில் இருந்து 28 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பால பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியல் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த திருப்பதி பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கௌதம், துளசி ,கீதா காயத்ரி, ருக்குமணி, சுதர்சன் ஆகியிருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்தனர் இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது