ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்;
சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) பெறுவதற்கு, www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். எனவே, ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.