வேப்பம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி ..
வேப்பம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி ..;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2025-26 ஆம் ஆண்டிற்கான தற்காப்பு கலைப் பயிற்சி பள்ளியில் 6.7, மற்றும் 8 வகுப்பு மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6.7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2025-26 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலை பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) கொ.வசந்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் பயிற்சியாளர் திரு. வெ. சரவணன் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு பல்வேறு தற்காப்பு கலை பயிற்சி குறித்தும் விளக்கம் அளித்து அதன் செயல்முறைகள் குறித்து செய்து காட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.