காங்கேயத்தில் முதல் பெண் ஏஎஸ்பி பதவி ஏற்பு
காங்கேயம் காவல் உட்கோட்டத்திற்கு முதல் பெண் ஏஎஸ்பி பதவி ஏற்பு.;
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இதுவரை டிஎஸ்பி ஆக 18 பேர் பணிபுரிந்து வந்தனர். டிஎஸ்பியாக பதவி வகித்த மாயவன் சென்னை சைபர் கிரைம் டிஎஸ்பியாக மாற்றப்பட்ட நிலையில் நேரடி ஐபிஎஸ் அதிகாரியான ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அர்பிதா ராஜ்பிட் இன்று காங்கேயம் சப் டிவிஷன் ஏ.எஸ்.பி யாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் காங்கேயம் காவல் நிலைய உட்கோட்டத்தில் பெண் அதிகாரியாக நேரடி ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.