நாட்டாகுடி கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஓர் அறிவிப்பு
நாட்டாகுடி கிராம மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசின் திட்டங்களின் கீழ் ரூபாய் 31 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.