வெண்ணந்தூரில் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என இருவேறு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு காவல்துறை, வருவாய் துறை அமைதி பேச்சுவார்த்தைக்கு கடும் எதிர்ப்பு:

வெண்ணந்தூரில் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என இருவேறு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு காவல்துறை, வருவாய் துறை அமைதி பேச்சுவார்த்தைக்கு கடும் எதிர்ப்பு:;

Update: 2025-08-06 14:13 GMT
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என இருவேறு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு காவல்துறை, வருவாய் துறை அமைதி பேச்சுவார்த்தைக்கு கடும் எதிர்ப்பு: கோவில் முன்பு பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாமியாடி காவல்துறையினரை அலறவிட்டனர். கோவில் கம்பத்தை பிடுங்கிய உடன் மண்ணை வாரி எரிந்து சாபம்: ஆறு மணி நேரமாக போராடிய கிராம மக்களால் பரபரப்பு.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதி ஈஸ்வரன் கோவில் வீதி அருகே ஸ்ரீ நீதி காத்த மஹா மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில் சம்பந்தமாக 20 வருடங்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே நடந்த மோதல் காரணமாக கோவில் கட்ட முடியாமல் கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. அந்த கோவிலுக்கு நேற்று ஆடி திருவிழா கம்பம் நடுவிழா நடைபெற்றது. இந்தக் கோவில் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.வேறு சமூகத்தினரும் ஆடி மாதத்திலேயே திருவிழா கொண்டாடுவதால் அவ்வப்போது கோஷ்டி மோதல் ஏற்பட்டு திருவிழாவில் பெரும் பிரச்சனையாகி வந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையின் போது அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் பின்பு பொது இடத்தில் மற்றொரு சமூகத்தினர் கோவில் தற்போது அவர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்த நிலையில் திருவிழாக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் அதிர்ச்சி அடைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை இடம் நேரில் சென்று புகார் தெரிவித்து அவர்கள் இந்த மாதத்தில் திருவிழா நடத்தக்கூடாது வேறொரு மாதத்தில் நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் சூழ்நிலை உருவானது. இதனை அடுத்து வெண்ணந்தூர் காவல்துறையினர் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராடி வந்தனர். இதனை அடுத்து ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன், ஆகியோர் சம்பவ இடத்தில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்து அதிரடிப்படை சேர்ந்த காவலர்களை சம்பவ இடத்தில் வரவழைத்து மேலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கம்பத்தை எடுத்தாக வேண்டும் என காவல்துறையும் வருவாய்த்துறையினர். உறுதியாக கூறிவிட்ட நிலையில் கோயில் முன்பு பத்துக்கு மேற்பட்ட பெண்கள் சாமி ஆடி இந்த கம்பத்தை எடுக்கக் கூடாது என கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் கோயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரமாக போராடிய அப்பகுதி மக்களுக்கு கோவில் முன்பாக கூழ் ஊற்றி பசி ஆற்றினர். பின்னர் கம்பத்தை பிடுங்கிய வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினரை அவர்கள் கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். மேலும் கம்பத்தை பிடுங்கிய நபர், மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பின்னால் சென்று மண்ணை வாரி இறைத்து பெண்கள் சாபமிட்டனர். மேலும் ஸ்ரீ நீதி காத்த மகா மாரியம்மன் கோவிலில் உள்ளே சென்று பக்தர்கள் கண்ணீர் மல்க கதறி அழுத காட்சியும் அங்கே நடந்தது. 6.மணி நேரத்திற்கு மேலாக போராடிய மக்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Similar News