ராசிபுரத்தில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் முதலுதவி அளித்த நடத்துனர் ஓட்டுனருக்கு பாராட்டு..
ராசிபுரத்தில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் முதலுதவி அளித்த நடத்துனர் ஓட்டுனருக்கு பாராட்டு..;
ராசிபுரத்தில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயக்கம்... உடனடியாக செயல்பட்டு பயணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஓட்டுனர்,நடத்துனர்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காளிப்பட்டியை நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் கிருபாகரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் பேருந்தானது கவுண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் பயணம் மேற்கொண்ட நஞ்சனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு திடீரென பேருந்தில் வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனை கண்ட மற்ற பயணிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கவே பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி உள்ளனர். பேருந்தில் வலிப்பு ஏற்பட்ட பயணிக்கு சக பயணிகள் முதல் உதவி செய்த நிலையில், நடத்துனர் செல்வம் என்பவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் ஆனந்தராஜை சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிக்கு உடனடியாக செயல்பட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஓட்டுனர் நடத்துனர் ஆகியோருக்கு பொதுமக்கள், பயணிகள் வெகுவாக பாராட்டினர்..