கோபி அருகே டி.ஜி.புதூர் மயானம், அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர் பர்கூரை சேர்ந்த பேக்கரி ஊழியர்

கோபி அருகே டி.ஜி.புதூர் மயானம், அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர் பர்கூரை சேர்ந்த பேக்கரி ஊழியர்;

Update: 2025-08-07 04:56 GMT
கோபி அருகே டி.ஜி.புதூர் மயானம், அரிவாளால் வெட்டி படுகொலை செய் யப்பட்டவர் பர்கூரை சேர்ந்த பேக்கரி ஊழியர் டி.என்.பாளையம் அடுத்த டி ஜி புதூர் அருகே மயானம் முன்புள்ள சாலையில் இளைஞர் ஒருவர் தலையில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக வாணிப்புத்தூர் சென்றாயம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் என்பவருக்கு தகவல் கிடைத்து. தகவலின் பேரில் நேற்று காலை சுமார் 9:30 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இடது பக்க தலையில் பின்புறமாக வெட்டு பட்டு முகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததும், யாரோ ஏதோ ஒரு ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கி கொலை செய்து உள்ளதாகவும் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதனைத் தொடர்ந்து மயானத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞரயார் என்பது குறித்தும், கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர், விசாரணையில் தலையில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தவர் பர்கூர் அருகேயுள்ள மேலூர் சுண்டபூர் பகுதியைச் சேர்ந்த மாதையன் என்பவரது மகன் மகன் நாகராஜ் (26) என்பதும், சித்ரா என்ற மனைவியும் ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்தது, நேற்று முன்தினம் இரவு, இறந்து போன நாகராஜ் மற்றும் குன்றி பண்ணையத்தூரை சேர்ந்த பார்த்திபன் என்பவரும் குடி போதையில் டி..ஜி.புதூர் மயானம் அருகே சுற்றித்திரிந்ததாக கூறப்படும் நிலையில், பார்த்திபன் என்பவரை பிடித்து பங்களாப்புதூர் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை நடந்ததற்காக காரணம் குறித்தும்? இந்த சம்பவத்தில் மேலும் யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படுகொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று தெரிகிறது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News