உடுமலை அருகே சிறப்பு காவல் உதவியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என்கவுண்டர் போலீசார் அதிரடி

உடுமலை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். முக்கிய குற்றவாளி என்கவுண்டர்- போலீசார் அதிரடி.;

Update: 2025-08-07 06:59 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் தந்தை மகன் தகராறு தொடர்பாக விசாரணைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் தந்தை மகன் தகராறில் தந்தை மூர்த்தியிடம் விசாரணை நடத்திவிட்டு போலீசார் மருத்துவமனைக்கு மூர்த்தியை அனுப்ப அவசர உறுதிக்கு தகவல் தெரிவித்து விட்டு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறையினரை கண்டு தப்பியோடிய மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறப்பு உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த குடிமங்கலம் போலீசார் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மூர்த்தி மற்றும் அவரது இளைய மகன் ஆகியோரை கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர் தொடர்ந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக மணிகண்டனை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது மணிகண்டன் தாக்குதலுக்கு பயன்படுத்தி அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கி ஏதாவது கூறப்படுகிறது இதில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் தப்பி ஓட முயற்சி செய்த மணிகண்டனை தலையில் சுட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி மணிகண்டனை பரிசோதித்த போலீசார் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயத்துடன் உதவியாளர் சரவணகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ் அசோக் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

Similar News