ராசிபுரம் நகர திமுக சார்பில் கலைஞர் நினைவு நாள் முன்னிட்டு அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம்...
ராசிபுரம் நகர திமுக சார்பில் கலைஞர் நினைவு நாள் முன்னிட்டு அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், தலைமையில் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா அவர்களின் முன்னிலையில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் திமுக கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 7.ம்.ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் உள்ள அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள 100.க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.