காங்கேயத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

காங்கேயத்தில் குடிநீர் கேட்டு பொண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-08-07 15:40 GMT
காங்கேயம் நகரம், தாராபுரம் சாலை, நீதிமன்றம் எதிரே உள்ள 14 வது வார்டுக்கு உள்பட்ட பழைய வக்கீல் வீதி பகுதியில் கடந்த 12 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று இரவு 7:30 மணியளவில், காலிக் குடங்களுடன் நீதிமன்றம் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காங்கேயம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News