நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பு நிகழ்ச்சி
டவுன் நெல்லையப்பர் கோவில்;
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 8) வரலட்சுமி நோன்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான சுமங்கலிகள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.