மேலப்பாளையத்தில் குடிநீரில் கலக்கும் சாக்கடை கழிவுநீர்
சாக்கடை கழிவுநீர்;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காட்டு புதுத்தெரு அருகில் உள்ள அம்பை ரோட்டில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.