வாகன விபத்தில் தம்பதியர் பலி
மதுரை கொட்டாம்பட்டி அருகே கார் டூவீலர் மோதியதில் தம்பதியர் பலியானார்கள்.;
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த விவசாயி முருகேசன்( 50) மற்றும் மனைவி ராதா (46) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (ஆக.6) இரவு மனக்கட்டு கிராமத்தில் முருகேசன் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மனப்பச்சேரி அருகே எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலயாகினார்கள். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.