கதிர் அறுப்பு வண்டி மோதியதில் பெண் பலி.
மதுரை சோழவந்தான் அருகே கதிர் அறுப்பு வண்டி மோதியதில் பெண் பலியானார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலின் மனைவி செருவம்மாள் (65) கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்குடன் குடியிருந்து வருகிறார். சோழவந்தான் சங்க கோட்டை கிராமத்தில் இவரது சகோதரர் சங்கிலி வீட்டில் அவ்வப்போது தங்கி வருவார். நேற்று (ஆக.7) சங்கிலியின் வயல்காட்டில் கதிர் அறுப்பு நடைபெற்றபோது வயல்காட்டிற்கு சென்ற செருவமாள் அங்கு கதிர் அறுப்பு எந்திரம் மூலம் பணியாளர்கள் கதிர் அறுத்து கொண்டிருந்த நிலையில் பின்னால் நின்று கொண்டிருந்த செருவம்மாள் மீது கதிர் அறுப்பு எந்திரம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.