சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
மதுரை அருகே சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை மாவட்டம் விளாச்சேரி ரோட்டை சேர்ந்த பொன்ராஜின் மகன் வசந்த் (24) என்பவர் வாடிப்பட்டி யில் வசித்து வரும் 16 வயது உறவுக்கார சிறுமியை ஆசைவார்த்தை கூறி கீழ குயில்குடியில் உள்ள கருப்பசாமி கோவிலில் திருமணம் கொண்டார். சிறுமி ஆறு மாதம் கர்ப்பமானார். இதனை அறிந்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் வசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.