திமுக சார்பில் பக்தர்களுக்கு பிரசாத பை
மதுரை திருமங்கலத்தில் திமுக சார்பில் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று (ஆக. 8 ) மாலை மதுரை தெற்கு மாவட்டம் திமுக சார்பாக கோவிலுக்கு வந்த 5000 பெண்களுக்கு பிரசாதம் பை மற்றும் புளியோதரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.