ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு: உரிமையாளர் மீது வழக்கு
தூத்துக்குடியில் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் கம்பெனி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;
தூத்துக்குடியில் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் கம்பெனி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஜான்சேவியர் நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் இருந்து அமோனியா வாயு கசிவு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வாயு கசிவை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஐஸ் கம்பெனி உரிமையாளர் ஒயிட் என்பவர் மீது கவனக்குறைவாக இருந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தாளத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.