இராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தினர்..
இராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தினர்..;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் மற்றும் வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பட்டணம் சக்தி நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் 20 பொருட்கள் அடங்கிய கைப்பை அனைவருக்கும் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் Dr.M. நந்தினி MBBS, பொது மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் அவர்கள் கடை பிடிக்க வேண்டிய முறையைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். இதில் சங்கத் தலைவர், செயலாளர்கள், மற்றும் பொருளாளர் கலந்து கொண்டார்கள்.. இந்த நிகழ்ச்சியை பட்டணம் அரிமா.பாலசுப்ர மணியம் மற்றும் களரம்பள்ளி அரிமா. பழனிவேல் அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாடினை செய்திருந்தார்கள்..