ஆம்பூரில் அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் மற்றும் தந்தை காயம்.. பேனர் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
ஆம்பூரில் அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் மற்றும் தந்தை காயம்.. பேனர் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் மற்றும் தந்தை காயம்.. பேனர் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் 13, 14 ஆகிய தேதிகள் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பேரணி நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி வருகை தர உள்ள நிலையில், அவரை வரவேற்க, அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேனர் ஒட்டி வைத்திருந்த நிலையில், அந்த பேனர் காற்றில் கிழிந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவனை அழைத்துச்சென்று கொண்டிருந்த தந்தை மகன் மீது விழுந்துள்ளது, இதில் தந்தை மகன் இருவரும், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தார், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சையிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேம்பாலத்திலிருந்து பேனர் கிழிந்து சாலையில் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..