விஸ்வகர்மா ஆலயத்தில் இன்று பூணூல் மாற்றி வழிபாடு
தூத்துக்குடி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு காமாட்சி அம்மன் விஸ்வகர்மா ஆலயத்தில் இன்று ஏராளமானோர் பூணூல் மாற்றி வழிபாடு;
இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு பூணூல் போடுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆவணி அவிட்ட தினத்தில் தங்கள் பூணூலை மாற்றி வழிபாடு நடத்துவர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தட்டார் தெரு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் விஸ்வகர்மா ஆலயத்தில் காலை முதல் ஏராளமானோர் புதிய பூணூலை மந்திரங்களை ஓதி பூஜைக்கு பின் அணிந்து கொண்டு வழிபாடு நடத்தினர் இதைத்தொடர்ந்து காமாட்சியம்மன் மற்றும் விஸ்வகர்மாவிற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது