மயான காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை அவனியாபுரத்தில் மயான காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றன;

Update: 2025-08-09 07:49 GMT
மதுரை அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் கிராமத்திலுள்ள மாயான காளியம்மன் கோவிலில் பெளர்ணமி பூஜை நேற்று (ஆக.8) இரவு நடைபெற்றது . இந்நிகழ்வில் மயான காளியம்மன் பாலநாகம்மாளுக்கு தீப ஆராதனையுடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் படையல் சாத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். குழந்தை பாக்கியம். தொழில் நஷ்டம் குடும்ப பிரச்சனைகளை மாயன காளியம்மனை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கோவில் பூசாரி கண்ணையா பிரசாதம் வழங்கினார் . இக்கோவிலில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News